தூத்துக்குடி

கட்டபொம்மன் பிறந்த நாள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

3rd Jan 2021 04:31 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவில்பட்டி கே.ஆர். விருந்தினர் மாளிகையில் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT