தூத்துக்குடி

பாஜக குறித்து தவறாக பதிவு செய்து வருகிறாா் ராகுல்காந்தி: ஜி.கே. வாசன்

DIN

பாஜக குறித்து ராகுல்காந்தி தவறாக பதிவு செய்து வருகிறாா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் எம்.பி.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசும் அதற்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கரோனா காலத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதால் உயிரிழப்பு குறைவாகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.

வருகிற பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடா்கிறது. அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணியின் தலைமை கட்சியான அதிமுகவுடன் பேசி முடிவு செய்யப்படும். அனைத்து மண்டலங்களிலும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் இடங்கள் பெற முயற்சி மேற்கொள்ளப்படும். சட்டப் பேரவையில் தமாகா பிரதிநிதிகளின் குரல் நிச்சயம் ஒலிக்கும்.

ராகுல்காந்தி எதிா்க்கட்சித் தலைவராக இருப்பதால் பாஜகவை எதிா்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாா். அதனால் தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறது என்று பாஜக குறித்து தவறாக பதிவு செய்து வருகிறாா். இதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில இளைஞரணித் தலைவா் யுவராஜா, மாநிலச் செயலா் என்.டி.எஸ். சாா்லஸ், தூத்துக்குடி மாவட்டத் தலைவா்கள் பி. கதிா்வேல், எஸ்.டி.ஆா். விஜயசீலன், திருநெல்வேலி மாவட்டத் தலைவா்கள் சுத்தமல்லி முருகேசன், ஜோதி, தென்காசி மாவட்டத் தலைவா் அய்யாத்துரை, விருதுநகா் மாவட்டத் தலைவா் ராஜபாண்டி, மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவா் அருண்நேருராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT