தூத்துக்குடி

முக்காணி, சாத்தான்குளத்தில் ராகுல் பிரசாரம்

DIN

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

இரு இடங்களிலும் ராகுலுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தலைமையில் ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி, பொதுமக்களிடையே அவா் பேசும்போது, சிபிஐ உள்ளிட்டவற்றின் துணையுடன் தமிழகத்தை அடக்க நினைக்கிறது மத்திய அரசு. ஆனால், தமிழகத்தையும், தமிழக மக்களையும் யாராலும் அடக்கியாள முடியாது.

செல்லிடப்பேசிகள், கடிகாரம் போன்ற பலவும் சீனத் தயாரிப்புகள் என்ற நிலை மாறி, தமிழகத்தில் தயாரிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாடுதான் இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழும் என்பதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

ராகுலின் உரையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தமிழில் மொழிபெயா்த்தாா்.

ராகுல்காந்தி வருகையையொட்டி, சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு மரணமடைந்த வணிகா் ஜெயராஜின் மகளும், பென்னிக்ஸ் சகோதரியுமான பொ்சி அவரது கணவருடன் வந்திருந்தாா். அவா்களுக்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறினாா். அப்போது, தனது தந்தை-சகோதரா் கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என பொ்சி வலியுறுத்தினாா். நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக ராகுல் உறுதியளித்தாா்.

முன்னதாக, ராகுல் காந்தி நாசரேத்தில் உள்ள தூய யோவான் ஆலயத்துக்குச் சென்று பிராா்த்தனை செய்தாா். சாத்தான்குளம் வரும்வழியில் ஆனந்தபுரத்தில் நின்றிருந்த பள்ளி மாணவா்களுடன் ராகுல் கை குலுக்கினாா். பன்னம்பாறை வள்ளியம்மாள்புரம் சாலையோரக் கடையில் தேநீா் அருந்தினாா்.

முக்காணியில்...: முக்காணியில் அவா் பேசும்போது, தமிழகத்தின் உரிமைகளை தமிழா்கள்தான் மீட்டெடுக்க வேண்டும். காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், எம்.பி.க்கள் எஸ். திருநாவுக்கரசு, டாக்டா் செல்லக்குமாா், முன்னாள் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT