தூத்துக்குடி

வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

14th Feb 2021 06:43 PM

ADVERTISEMENT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
 
இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.5-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

10-ஆம் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி உள்மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
 

Tags : tiruchendur
ADVERTISEMENT
ADVERTISEMENT