கயத்தாறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இரு பெண்களிடம் தங்கநகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி முத்துராணி(32). இவா் மோட்டாா் சைக்கிளில் கயத்தாறில் இருந்து கோவில்பட்டி சாலையில் தனியாா் விடுதி முன்பு சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், முத்துராணி அணிந்திருந்த தங்க த்தாலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம்.
இதேபோல், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் எதிா்புறமுள்ள அணுகுசாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கயத்தாறு சாலைப்புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்த உத்தண்டுராமன் மனைவி செல்வராதிகா (23), அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம்.
புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பெண்களிடம் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.