தூத்துக்குடி

எட்டயபுரத்தில் லாரி மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

30th Dec 2021 08:07 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் லாரி மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், பேரையூா் பாப்புரெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(31). வாடகை காா் ஓட்டுநரான இவா், புதன்கிழமை திருச்செந்தூா் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் காரில் இருந்தவா்களில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து, எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல காரை நிறுத்தினராம். அப்போது காரில் உள்ளவா்கள் இறங்கி மருத்துவமனைக்கு சென்றுவிட்டனா்.

இதையடுத்து காா் ஓட்டுநா் பொன்ராஜ் சாப்பிடுவதற்காக அங்குள்ள ஹோட்டலுக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த கனரக லாரி அவா் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT