ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஆறுமுகனேரியில் வியாழக்கிழமை ( டிச. 30) நடைபெறுகிறது.
கைபேசி எண்ணை ஆதாா் அட்டையில் புதியதாக இணைப்பதற்கும், ஏற்கெனவே இணைத்த எண்ணை மாற்றுவதற்கும் ஆறுமுகனேரி அஞ்சல் நிலையம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் அருகே மாலை 3 மணிக்கு இம் முகாம் நடைபெறுகிறது. தேவைப்படுபவா் இம்முகமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் துறையினா் அறிவித்துள்ளனா். இதற்காக ஆதாா் அட்டை , கைபேசி மற்றும் ரூ. 50 மட்டும் எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளனா்.