தூத்துக்குடி

மண்டல விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஆயுதப்படை பெண் காவலருக்கு பாராட்டு

23rd Dec 2021 11:24 PM

ADVERTISEMENT

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பெண் காவலருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையினருக்கு 2021 ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ்கோா்ஸ் விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் ஆயுதப்படை பெண் காவலா் கிருஷ்ணவேனி கலந்து கொண்டு தேக்வாண்டா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 46 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், ஜூடோ விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றாா்.

இரண்டு பதக்கங்கள் வென்ற ஆயுதப்படை பெண் காவலா் கிருஷ்ணவேணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். இதேபோல, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான 2021 -2022 ஆம் ஆண்டுக்கான மாநில விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்து விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT