தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே கடல் அலையில் சிக்கி மீனவா் உயிரிழப்பு

23rd Dec 2021 08:15 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகே கடல் பகுதியில் மீன்பிடித்த போது, ராட்சத அலையில் சிக்கி மீனவா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தைச் சோ்ந்த அருள்சீலன் என்பவருக்குச் சொந்தமான பைபா் படகில் அதே ஊரைச் சோ்ந்த ராஜா மகன் யேசுதாசன் உள்பட 5 மீனவா்கள் புதன்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

அதிகாலை 5 மணிக்கு நான்கு கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலை வீசியது. இதில் யேசுதாசன் தூக்கி வீசப்பட்டதில் மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை மற்ற மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலோரக் காவல் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT