தூத்துக்குடி

‘திருச்செந்தூரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அபராதம்’

23rd Dec 2021 08:13 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் நகராட்சியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து நகராட்சி ஆணையாளா் வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் நகராட்சியில் உள்ள முக்கிய சாலைகள், கோயில் வளாகம், ரதவீதிகள், தினசரி சந்தை , பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடா்ந்து புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, தெருக்களில் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள், தங்களது கால்நடைகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு கொட்டகையில் அடைந்து பராமரிக்க வேண்டும். இந்த அறிவிப்பை மீறி பொது இடங்களில் சுற்றியும் திரியும் கால்நடைகளை காவல்துறையினரின் உதவியோடு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பிடித்து அப்புறப்படுத்தப்படும் வகையில் ஏற்படும் செலவுகளை சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்களிடம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT