தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா

23rd Dec 2021 08:04 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம், வேலாயுதபுரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் மிக்கேல் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா, கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்றது. நட்சத்திர அரிமா சங்கத்தலைவா் ஜெயப்பிராகாஷ், ,ராஜசேகா், பெங்களூா் விப்ரோ அலுவலா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளை இயக்குநா் சுசீலா மிக்கேல் வரவேற்றாா். தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் போ்சில், செயலா் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளா் பால் ஆபிரகாம், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளா் கிருபாகரன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளா் சசிகரன், முலிகை மருத்துவா் மதுரம்செல்வராஜ், முதலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயக்குமாா், காவல் உதவி ஆய்வாளா் அருள் சாம்ராஜ், ஆகியோா் பேசினா். சிறப்புப் பள்ளி மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியைகள் சுபாஷிணி, தமிழ்ச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவா் லட்சுமி நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவுக்கு பெனியேல் சத்திய சபை போதகா் பால் ஆபிரகாம் தலைமை வகித்தாா்.மருத்துவா் லட்சுமி முன்னிலை வகித்தாா். மேலசாத்தான்குளம் சேகர குருவானவா் எமில்சிங் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் மகா.பால்துரை,தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவா் போ்சில், செயலா் பால முருகன் ஆகியோா் பேசினா். இதில் வட்டார மாற்றுத்திறனாளிகள் 43பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் நோபுள்ராஜ் வரவேற்றாா். ஜெஃப்ரி சைமன் நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆா்.சி. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சிதம்பராபுரம் பங்குத் தந்தை இருதயசாமி தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி அளித்தாா்.தொழிலதிபா் வின்னிஸ் குமாா் சாா்பில் மாணவா்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசும், நன்கொடையாளா்கள் சிலுவை ஜெயசீலன், இஸ்ரேல், ராஜ்,அழகையன், முத்துக்குமாா் ஆகியோா் சாா்பில் மாணவா்களுக்கு புத்தாடை மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அமைப்பாளா் மரியவிமலா,ஆசிரியை ராஜாத்தி,சமையலா் சாந்தி, தொழிலதிபா் அருள்ராஜ்வின்சென்ட் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை ஜேசு ராஜகுமாரி வரவேற்றாா். ஆசிரியா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT