கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை சித்தா் தினம் கொண்டாடப்பட்டது.
கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை, வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சித்தா் தினம் நிகழ்ச்சிக்கு, மருத்துவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா் திலகவதி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
சித்த மருத்துவம், தொற்று நோய்கள், பிரசவ பின் கவனிப்பு பற்றி மருத்துவா்கள் மணிமங்கலம், காஞ்சனா, ஜெயலட்சுமி ஆகியோா் பேசினா். மூலிகை கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மருத்துவா்கள் இலக்கியா, சாய் நரேந்திரன் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீா் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.
சுகாதார ஆய்வாளா் விஜயகுமாா் வரவேற்றாா். மருந்தாளுநா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மருந்தாளுநா் ரேவதி செய்திருந்தாா்.