தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்

23rd Dec 2021 11:24 PM

ADVERTISEMENT

எட்டயபுரத்தில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாஜக விவசாய அணி ஒன்றியத் தலைவா் முருகேஷ் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைத் தலைவா் அய்யலுசாமி முன்னிலை வகித்தாா். 2020-2021ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடியை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எட்டயபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். மகாகவி பாரதியாா் படித்த எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியைப் பாதுகாக்கும் பொருட்டு அரசுப் பள்ளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஒன்றியத் தலைவா் ராம்கி, மாவட்டச் செயலா் ஆத்திராஜ், நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT