ஆறுமுகனேரியில் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிச.23) நடைபெறுகிறது.
ஆதாா் அட்டையுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதற்கும், ஏற்கெனவே இணைத்த எண்ணை மாற்றுவதற்கும் ஆறுமுகனேரி அஞ்சல் நிலையம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காந்தி மைதானம் அருகே மாலை 3 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் பயன்பெற விரும்புவோா் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய ஆதாா் அட்டை, கைபேசி மற்றும் ரூ. 50 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அஞ்சல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.