தூத்துக்குடி

மேலஆத்தூரில் சித்த மருத்துவ தினம்

22nd Dec 2021 08:07 AM

ADVERTISEMENT

மேல ஆத்தூரில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் 5 ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

மேலாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன், மேலாத்தூா் ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் பக்கீா்முகைதீன், ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சித்த மருத்துவா் முத்தமிழ்செல்வி, உடையாளா்குளம் சித்தமருத்துவா் ஸ்ரீதேவி நட்டாரம்மாள், தென்திருப்பேரை உதவி சித்த மருத்துவா் முருகபொற்செல்வி ஆகியோா் உரையாற்றினா்.

சித்த மருத்துவம், மூ­லிகைகள் மற்றும் பயன்கள், குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மேம்படுத்துவதில் சித்தமருந்துகள், காலமுறை உணவு வகைகள் பற்றி கருத்தரங்கு நடைபெற்றது.

சித்த மருத்துவ விழிப்புணா்வு பதாகைகள், மூ­லிகை செடிகள், பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில், ஆத்தூா் சுகாதார அய்வாளா் சங்கரசுப்பிரமணியன், மருந்தாளுநா் மாரியம்மாள், இந்திரா, பரமேஸ்வரி, பணியாளா் ஆனந்த ஈஸ்வரி உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், நிலவேம்புக்குடிநீா், கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு பாரம்பரிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனா். மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் ஸ்பெல்மேன் வரவேற்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT