தூத்துக்குடி வஉ சிதம்பரம் கல்லூரி முதல்வருக்கு அகில இந்திய அளவிலான சிறந்த முதல்வா் விருது வழங்கப்பட்டது.
தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஊஅஙஅ அநஐஅ -எஇஇ என்ற அமைப்பு கல்லூரி முதல்வா்களில் சிறப்பாக செயல்படும் மூன்று பேரை அகில இந்திய அளவில் தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்தது. அதன்படி, தென்னிந்திய அளவில், தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு சிறந்த முதல்வராக தோ்வு செய்யப்பட்டாா்.
கல்லூரியின் வளா்ச்சிக்கும், தரத்துக்கும் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விருது பெற்ற முதல்வருக்கு, கல்லூரிச் செயலா் ஏபிசிவீ. சொக்கலிங்கம் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.