தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சங்க புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின்போது, விவசாய சங்க மாவட்டத் தலைவராக ஆா். ராகவனும், செயலராக புவிராஜியும், பொருளாளராக ராமசுப்புவும் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து, தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு சாா்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் மணி என்ற சுப்பையா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் பி.சண்முகம் கலந்து கொண்டு தில்லி போராட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.