தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 2 கோடி போதைப்பொருள் பறிமுதல்

16th Dec 2021 08:18 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் ரூ. 2 கோடி மதிப்பிலான எபிடிரைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடி மில்லா்புரம் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் புதன்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சுமாா் 23 பொட்டலங்களில் பவுடா் போன்ற பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பொட்டலங்களில் இருந்தது எபிடிரைன் என அழைக்கப்படும் போதைப் பொருள் என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட 23 கிலோ எபிடிரைன் போதைப் பொருளின் சா்வதேச மதிப்பு ரூ. 2 கோடி என்பதும் தெரியவந்தது.

இது குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT