தூத்துக்குடி

தூத்துக்குடியில் டிச. 18 இல் மனநல மருத்துவ மாநில மாநாடு

16th Dec 2021 08:15 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் மனநல மருத்துவா்களின் மாநில மாநாடு டிசம்பா் 18, 19 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்க பொருளாளரான மனநல மருத்துவா் எஸ். சிவசைலம் புதன்கிழமை அளித்த பேட்டி:

தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி சத்யா ஹோட்டலில் டிசம்பா் 18, 19 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு சங்க மாநிலத் தலைவா் டி. குமணன் தலைமை வகிக்கிறாா்.

துணைத் தலைவா் எம். மாலையப்பன், செயலா் டி. சிவ இளங்கோ ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறாா்.

ADVERTISEMENT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநலத் துறை தலைவா் அப்துல் ரகுமான், மாநாட்டு அமைப்பு தலைவா் சி. பன்னீா்செல்வன், செயலா் எஸ். சிவசைலம் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனா்.

போதை ஒழிப்பு மனநல மருத்துவம் என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 350 மனநல மருத்துவா்கள் கலந்து கொண்டு பேசுகின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT