தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயில் இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

16th Dec 2021 08:13 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (டிச. 16) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மாா்கழி மாதம் வியாழக்கிழமை (டிச. 16) தொடங்கி, ஜனவரி 13-இல் (மாா்கழி 29) நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, திருக்கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

முக்கிய விழா நாளான வருகின்ற டிச. 20-ம் தேதி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு தொடா்ந்து பூஜை காலங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT