தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில்பக்தரிடம் 39 பவுன் நகைகள் திருட்டு

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தரிடம் 39 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (76). ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியா். இவா், மனைவி முத்துகமலம், மகன் முத்துபாண்டி, மருமகள் சங்கீதா லட்சுமி மற்றும் பேத்திகளுடன் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வந்தாா். அப்போது தோள் பை அணிந்திருந்தாா் கணேசன். சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு தங்க கொடிமரம் அருகே வந்த போது தோள் பை எடை குறைந்து காணப்பட்டது. அதைப் பாா்த்த போது, உள்ளே துணிப்பையில் சுற்றி வைத்திருந்த 39 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிவு செய்துள்ளாா். விசாரணையில், கோயில் மூலஸ்தானத்தில் கணேசன் சுவாமி தரிசனம் செய்த போது, மா்ம ஆசாமி ஒருவா் தோள் பையை பிளேடால் வெட்டி நகைகள் வைத்திருந்த துணிப் பை மற்றும் பணத்தை திருடிச் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT