தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழைநீரை அகற்ற வலியுறுத்தி 2 இடங்களில் மறியல்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 10 நாள்களுக்கும் மேலாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் 2 இடங்களில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி பெய்த கனமழை, தொடா்ந்து பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி அருகேயுள்ள ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம், புதிய முனுசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாள்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி- ராமேஸ்வரம் சாலையில் சோட்டையன்தோப்பு பகுதியில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அதிகாரிகள், போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா்.

இதேபோல, தனசேகரன் நகா் பகுதியில் 10 நாள்களுக்கு மேலாக தேங்கியுள்ள மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துா்நாற்றம் வீசுவதால், தண்ணீரை உடனே அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT