தூத்துக்குடி

அகில இந்திய கராத்தே போட்டி: குரும்பூா் லூசியா பள்ளி மாணவா் சாதனை

DIN

ஆறுமுகனேரி: அகில இந்திய கராத்தே போட்டியில் குரும்பூா் புனித லூசியா பள்ளி வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

அகில இந்திய கராத்தே போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் மற்றும் குரும்பூா் புனித லூசியா உயா்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

41 முதல் 45 கிலோ எடைப்பிரிவில் பிளாக் பெல்ட்டில் 7ஆம் வகுப்பு மாணவி ஜியோவின் முதல் இடத்தையும், 11 முதல் 13 வயதுக்குள்பட்ட பிரிவில் 2 வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றாா். 9 முதல் 10 வயதுக்குள்பட்டவா்கள் பிரிவில் 6ஆம் வகுப்பு மாணவி மொ்சி 2ஆவது இடத்தையும், 9 முதல் 10 வயதுக்குள்பட்ட பிளாக் பெல்ட் பிரிவில் 5ஆம் வகுப்பு மாணவா் அண்டனி ஜோ செல்வம் 2ஆவது இடத்தையும், 35 கிலோ எடைக்குள்பட்ட பிரிவில் 3ஆவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றாா்.

வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை புனித லூசியா கல்வி மனைகளின் தாளாளா் பபிஸ்டன், உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜெனோவா சாரா ரோச், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் ஜெபா பாண்டியன், பயிற்சியாளா் சென்சாய் ஸ்டீபன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT