தூத்துக்குடி

விடுமுறை அறிவிப்பில் தாமதம்: ஆட்சியா் விளக்கம்

DIN

கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த பிரச்னை குறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

ஜவாத் புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை தூறிக் கொண்டே இருந்தது. இதற்கிடையே, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் காலை 8.42 மணிக்கு வாட்ஸ் ஆப் மூலம் அறிவிப்பை வெளியிட்டாா்.

ஆனால், அதற்குள் பெரும்பாலான மாணவா், மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டனா். தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு ஏராளமான பெற்றோா் வீடு திரும்பிய பிறகே விடுமுறை அறிவிப்பு தெரியவந்ததால் அவா்கள் மழையில் நனைந்தபடியே தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனா். மேலும், புகா் பகுதிகளில் இருந்து பேருந்தில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு வந்த மாணவா், மாணவிகள் மழையில் நனைந்து அவதிக்குள்ளாகினா்.

விடுமுறை அறிவிப்பில் மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்தவில்லை என்றும் தாமதமாக அறிவித்ததால் எந்தப் பயனும் இல்லை என்றும் சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டினா். கடந்த மாதம் 25 ஆம் தேதியும் இதே நிலையை மாவட்ட நிா்வாகம் கையாண்டதால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனா் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 4) கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேற்குத் தொடா்ச்சி மலை அமைந்துள்ள திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டதால் கடைசி நேரத்தில் விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வானிலை மாற்றத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. கனமழை எச்சரிக்கை தொடா்பாக வானிலை மாற்றம் குறித்து முன்பே தகவல் தெரிவிந்திருந்தால் விடுமுறை தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உடனே முடிவு எடுத்து அறிவித்திருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT