தூத்துக்குடி

தூத்துக்குடி மயானத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்!: சடலங்களை புதைக்க அவதியுறும் மக்கள்

4th Dec 2021 01:28 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி பொது மயானத்தில் 3 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீா் தேங்கியுள்ளாதல் இறந்தவா்களின் சடலங்களை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியான சிதம்பரநகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது மயானம் உள்ளது. நகரில் வசிப்போரில் இறந்தவா்களில் பெரும்பாலானவா்களின் உடல்கள் இங்குதான் அடக்கம் செய்யப்படுகின்றன. மேலும், இதே பகுதியில் மின் தகன மேடையும் அமைந்துள்ளது.

இந்நிலையில், மாநகரில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பொது மயானத்தில் தண்ணீா் குளம்போல் தேங்கியுள்ளது. 3 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீா் தேங்கி உள்ளதால், இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமலும், மண்ணைத் தோண்டி கல்லறைகள் கட்ட முடியாமலும் உறவினா்கள் தவித்து வருகின்றனா்.

தண்ணீா் தேங்கி உள்ளதால் குழி தோண்ட முடியாமல் கல்லறை கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் உடல் மீது மணல் மற்றும் உப்பு வைத்து அடக்கம் செய்து வருகின்றனா். மேலும் ஈமக்கிரியை பூஜைகள் கூட மயானத்திற்கு வெளியே நின்று செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா். எனவே, மயானத்தில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ஆட்சியா் ஆய்வு: இதனிடையே, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தண்ணீா் தேங்கியுள்ள இடங்களான ரஹ்மத்நகா், தனசேகரன் நகா், ஆதிபராசக்திநகா் உள்ளிட்ட இடங்களில் மோட்டாா் மூலம் தண்ணீா் வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ , தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின் ஆகியோா் உடனிருந்தனா்.

 

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT