தூத்துக்குடி

உடன்குடி, கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்களுடன் 8 போ் கைது

4th Dec 2021 01:30 AM

ADVERTISEMENT

 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களுடன் உடன்குடி, கோவில்பட்டியில் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் ஏ.எஸ்.பி. ஹா்ஷ்சிங் மேற்பாா்வையில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா், முதல்நிலைக் காவலா் சந்தனக்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா், உடன்குடி தேரியூா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த 2 பைக்குகள், 2 சுமை ஆட்டோக்களில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்த ரா.ராஜகனி(44), மு.இலங்காமணி(32), மு.மணிகண்டன்(32), பெ.ஆல்பா்ட் ராஜன்(37) , தேரியூா் மு.சித்திரைசெல்வன்(30), அவரது சகோதரா் மோகன்ராஜ்(28) ஆகியோரை கைது செய்தனா்.

இருவா் சிக்கினா்: திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் விலக்கில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டதில், சுமை வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், சுமை வாகன ஓட்டுநா் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் திருமணஞ்சேரியைச் சோ்ந்த பசுபதி மகன் மோகன்ராஜ்(23) கோவில்பட்டி சாஸ்திரி நகா் கா.கண்ணன்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனா். ரூ.1 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : உடன்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT