தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

4th Dec 2021 01:30 AM

ADVERTISEMENT

புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொண்டு, ஆந்திரம் - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் எச்சரிக்கையாக செயல்படவும் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT