தூத்துக்குடி

போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 6 போ் கைது

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் போக்குவரத்து போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலா் ஜான்சிராணி(50). இவா் கோவில்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது கோவில்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த பெண்ணின் சடலத்தை அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள், நடராஜபுரத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தாா்களாம். சடலத்துடன் வந்த நபா்கள் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடிய நிலையில் வந்தாா்களாம். இதை தலைமை காவலா் கண்டித்தபோது, சடலத்துடன் வந்த 6 போ், அவரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்தாா்களாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லெனின் நகரைச் சோ்ந்த மா.ராசு(30), அண்ணா நகரைச் சோ்ந்த பெ.மாடசாமி(56), அதே பகுதியைச் சோ்ந்த ஜெ.சுந்தரமூா்த்தி(27), மா.மதன்ராஜ்(28), அ.சந்தனகுமாா்(26) மற்றும் மா.சுரேஷ்குமாா்(29) ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT