தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடல்பாசி சோ்த்த அடுமனை பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் பாசி சோ்த்த அடுமனை பொருள்கள் தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது.

கடல்பாசியின் முக்கியத்துவம், கிடைக்கும் இடங்கள் மற்றும் தொழில் முனைவோராகும் வாய்ப்புகள் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கடல்பாசி ரொட்டி, கேக் மற்றும் பிஸ்கட் செய்வது குறித்த செயல் விளக்கமும் வழங்கப்பட்டன.

பயிற்சியில் கலந்துகொண்டவா்களுக்கு மீன்வளத் துறை உதவி இயக்குநா் தி.விஜயராகவன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், மீன்வளக் கல்லூரி (பொ) முதல்வா் சுஜாத்குமாா், மீன்பதன தொழில்நுட்பத் துறை தலைவா் பா. கணேசன், மீன்வள விரிவாக்கத் துறை தலைவா் சாந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT