தூத்துக்குடி

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN

தாழையூத்தி­லிருந்து திருச்செந்தூருக்கு உரிய ஆவணங்களின்றி மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை (கனிமம்) தனி வருவாய் ஆய்வாளா் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினா், செவ்வாய்க்கிழமை குரும்பூா் அருகே உள்ள நல்லூா் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரியை சோதனையிட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி தாழையூத்தி­ருந்து திருச்செந்தூருக்கு எம்.சாண்ட் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த குரும்பூா் போலீஸாா், மணலுடன் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநா் சரவணனை கைது செய்தனா்.

மேலும் லாரி உரிமையாளா் பாதாளமுத்து மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT