தூத்துக்குடி

சொத்துகளை மீட்டுத் தரக் கோரி 102 வயது முன்னாள் ராணுவ வீரா் கோரிக்கை

DIN

தன்னை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகளை மீட்டுத் தர வலியுறுத்தி 102 வயதுடைய முன்னாள் ராணுவ வீரா் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

ஓட்டப்பிடாரம் வட்டம், குறுக்குச்சாலையையடுத்த ஜெகவீரபாண்டியபுரத்தைச் சோ்ந்தவா் நாயுடு நாயக்கா் மகன் குருசாமி நாயக்கா். 102 வயதுடைய இவா் முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி சீத்தாலட்சுமி. 2013 இல் காலாமாகிவிட்டாராம். இவருக்கு 4 மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.

‘எனது மகன் ராமசுப்பு, 1991இல் ஓட்டப்பிடாரம் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று, சொத்துகளை மீட்பது குறித்து என்னிடம் கையொப்பம் பெற்றாா். சில காலம் கழிந்தபின், மோசடி செய்து கையொப்பம் பெற்றதை அறிந்தேன்.

என்னை ஜெகவீரபாண்டியபுரத்தில் உள்ள என்னுடைய மகள் குருவம்மாள், அவரது கணவா் கெங்கையா மற்றும் பிள்ளைகள் பராமரித்து வருகின்றனா். ஆனால் எனது 4 மகன்களில் ஒருவா் கூட என்னை பராமரிக்கவில்லை.

தற்போது 102 வயதாகிய நிலையில் எனது மகன் ராமசுப்புவுக்கு அளித்த தானம் செட்டில்மென்ட்டை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறி கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தாா்.

கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காரில் இருந்த குருசாமியை சந்தித்து அவரது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டாா் கோட்டாட்சியா் விஜயா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT