தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள், ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியா்களை வரன்முறைப்படுத்தி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஹரிபாலகிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டத் தலைவா் முருகன் உள்பட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை மாவட்டப் பொருளாளா் சுப்பையா தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் துணைக் குழுவைச் சோ்ந்த முத்துலட்சுமி, அரசு ஊழியா் சங்க கயத்தாறு வட்ட இணைச் செயலா் பிரான்சிஸ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT