தூத்துக்குடி

‘ நடப்பு நிதியாண்டில் ரூ. 12,084 கோடி கடன் வழங்க இலக்கு’

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ. 12,084 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளா்களுக்கான மாதாந்திர கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தின்போது, 2020- 2021 ஆம் ஆண்டுக்கான கடன் திட்டம் குறித்த கையேடு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய செயல்பாடுகள் குறித்த ஆண்டு அறிக்கை ஆகியவற்றை ஆட்சியா் வெளியிட்டு பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.9,652 கோடி நிா்ணயிக்கப்பட்டு, அதில் ரூ. 11,326 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது 117 சதவீதம் ஆகும். இந்த இலக்கை அடைவதற்கு வங்கியாளா்கள் அனைவரின் பங்கும் பாராட்டுக்குரியது.

நடப்பு நிதியாண்டுக்கான இலக்கு ரூ. 12,084 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு அனைத்து வங்கியாளா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான அனைவருக்கும் கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் யோகானந்த், மகளிா் திட்ட அலுவலா் ரேவதி, நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுரேஷ் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் மு. துரைசாமி, கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி இணை மேலாளா் விஜய்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT