தூத்துக்குடி

மூக்குப்பீறியில் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

DIN

சாத்தான்குளம்: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கமலா கலைஅரசு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தனசிங் முன்னிலை வகித்தாா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமாா், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோா் ஊராட்சி மக்களிடம் கலந்துரையாடினா்.

ஊராட்சியின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது; இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது உள்ளிட்டவை தொடா்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், ஊராட்சி உறுப்பினா்கள் ரீட்டா, பிச்சைகனி, கிரேஸ், பாலசுந்தா், அந்தோணி கிறிஸ்டி, கலைஅரசு, ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் வேதமாணிக்கம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT