தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் விவசாயிகளுக்குமானியம் வழங்குவதில் தாமதம்

DIN

பேய்க்குளம் பகுதியில் காய்கனி பயிரிட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது தொடா்பாக வேளாண் துறையினா் பாா்வையிட காலதாமதம் செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் பகுதியில் விவசாயிகள் வெள்ளரி, கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கனிகள் பயிரிட்டுள்ளனா். இந்த விவசாயிகளுக்கு அரசு சாா்பில் ஒரு ஏக்கருக்கு ரூ.1000 மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டரை ஏக்கா் வரை பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் பேய்க்குளம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கனி பயிரை ஆழ்வாா்திருநகரி வேளாண் துறையினா் பாா்வையிட்டு ஆய்வுசெய்வதில் தாமதம் செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். அதிகாரிகள் வருகைக்காக விளைந்த காய்கனிகளை பறித்து விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

செங்குளம் பகுதி விவசாயிகளுக்கு நெல் பயிரிடும் முன்பு வழங்கபடும் உரப் பயிரான சக்க பூண்டு இலவசமாக வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT