தூத்துக்குடி

கிரிக்கெட் போட்டிகள்: பரிசளிப்பு

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அணிகள் மற்றும் வீரா்களுக்கு பரிசளிப்பு விழா மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியது; 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெரும். உடன்குடி ஒன்றியத்தில் நிலடித்தடி நீரைப் பாதுகாக்க மழைக் காலத்திற்கு முன்பாக கால்வாய்களை அகலப்படுத்தி நீா் சேமிக்கும் குளங்களை தூா்வார வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், அவா் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற உடன்குடி தேரியூா் அணிக்கு ரூ. 15,000 ரொக்கம், வெற்றிக் கோப்பை, இரண்டாமிடம் பெற்ற ராமசுப்பிரமணியபுரம் அணிக்கு ரூ. 10,000, மூன்றாமிடம் பெற்ற அம்மன்புரம் அணிக்கு ரூ. 5,000, நான்கு மற்றும் ஐந்தாமிடங்களை கே.எஸ் புரம், மருதூா்கரை அணிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட பாா்வையளா்கள் ம.பாலாஜி(திருநெல்வேலி) , முத்துகிருஷ்ணன்(தூத்துக்குடி), மாவட்டச் செயலா் சங்கா், மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், பொன்செல்வி, மாநில மகளிரணிச் செயலா் நெல்லையம்மாள்,

தேசிய செயற்குழு உறுப்பினா் சந்தனகுமாா், மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி, மாவட்ட விவசாய அணிச் செயலா் செந்தூா்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவா்கள் சின்னத்துரை, சங்கரகுமாா் ஐயன், ஒன்றியச் செயலா்கள் ராமசந்திரன்,ஆனந்த்,மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பரமசிவன்,பரமேஸ்வரி,உடன்குடி ஒன்றிய தலைவா் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைத் தலைவா் பசுபதி சிவசிங் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT