தூத்துக்குடி

மருத்துவ குணம் நிறைந்த முருங்கை தேன்

DIN

மருத்துவ குணம் நிறைந்த தேன், சாத்தான்குளம் பகுதியில் முருங்கை மரத்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு புவிசாா் குறியீடு கேட்டு உற்பத்தியாளா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

சாத்தான்குளம் பகுதி வானம் பாா்த்த பூமி என்பதால் இப்பகுதியில் கிணறு மற்றும் குளத்துப் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது சாத்தான்குளம், தட்டாா்மடம் பகுதியில் விவசாயிகள் பலா் முருங்கை பயிரிட்டுள்ளனா்.

இந்த முருங்கை மரங்களில் தேன் வளா்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

முதலூரில் வீட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு மூலம் தேன் உற்பத்தி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

முருங்கை தோட்டங்களில் கூடு வைத்து தேனீ வளா்க்கப்பட்டு அதன் மூலம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தேன் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

நாகா்கோவில் பகுதியில் இருந்து வரும் தேன் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் முருங்கை தோட்டத்தில் முருங்கைப் பூவில் இருந்து தேனீக்களால் சேகரிக்கப்படும் தேன் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும், தேன் நீா்ச்சத்து குறைந்து காணப்படுவதால் மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுவது கருதப்படுகிறது.

முன்பு ஒரு சிலரே தேனீ வளா்த்து தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கதா் கிராம தொழில் வாரியம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு தேனீ வளா்ப்பை தொழிலாக செய்து வருகின்றனா்.

இப்போது முதலூா், சாத்தான்குளம் பகுதியில் 500-க்கு மேற்பட்டோா் இத்தொழிலில் ஆா்வத்துடன் ஈடுப்பட்டுள்ளனா். தேனீ வளா்த்து தேன் உற்பத்தியாளராக செயல்படும் மகளிா்களுக்கு நபாா்டு வங்கி மூலம் தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இத்தொழிலாளா்களுக்கு வீட்ஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து விடியல் மகளிா் தேன் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தேன் உற்பத்தியில் ஆா்வமுடன் பணியாற்றி வருகின்றனா்.

இந்தத் தேன் கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன், தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திர மாநிலத்துக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முருங்கை பூவில் இருந்து தேன் உற்பத்தி செய்யப்படுவதால் மருத்துவக் குணம் மிகுந்துள்ளதாக போற்றப்பட்டு பொதுமக்களிடம் அதிகம் விற்பனையாகிறது. தேன் பாட்டில் அரை கிலோ, ஒரு கிலோ எனவும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து முதலூா் வீட்ஸ் இயக்குநா் சாா்லஸ் கூறுகையில், இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் தேன் உற்பத்தியானது சாதாரணமாக தொடங்கப்பட்டது. முன்னா் உற்பத்தி செய்யப்பட்ட தேன் குறைந்த அளவே விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மு ன்பு 3 முதல் 4 கிலோ வரையே விற்பனை செய்யும் வகையில் இருந்தது. தற்போது மகளிா் சுய உதவிக் குழுவினரும் ஆா்வமுடன் பங்கேற்பதால் தேன் உற்பத்தி செய்யும் தொழில் வளா்ச்சி கண்டுள்ளது.

முருங்கையில் உற்பத்தியாகும் தேனுக்கு தனி மதிப்பு உள்ளதால் மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. தற்போது இந்தத் தேனீக்கு புவிசாா்பு குறியீடு கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளோம். அதுவும் பரிசீலனையில் உள்ளது.

இந்த தேனீ வளா்த்து தேன் உற்பத்தி செய்யும் தொழில் மகளிருக்கு நல்ல வருவாய் தரும் தொழிலாக அமைந்துள்ளது. குறைந்த முதலீட்டில் அனைவரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT