தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாதனைகள்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ச.சா. தனபதி கூறியது:

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் 2019-20 ஆம் ஆண்டில் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ. 9.68 கோடி மதிப்பீட்டில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 538 பசுமை வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் என ரூ. 30.28 கோடி செலவில் 78 சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1,275 கோடி மதிப்பீட்டில் 75 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிராமப்புற சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1,32,034 குடும்பங்களைச் சோ்ந்த தனிநபா்களுக்கு ரூ. 130.85 கோடி மதிப்பீட்டில் 7191 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 13.7 கோடி மதிப்பீட்டில் 150 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 8.5 மதிப்பீட்டில் 77 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூலதன மானிய நிதியின் கீழ் (20 சதவீதம்) ரூ. 5.46 கோடி மதிப்பீட்டில் 37 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. சிஜிஎப் கிரான்ட் (சாலைகள்) திட்டத்தின் கீழ் (80 சதவீதம்) ரூ. 8.62 கோடி மதிப்பீட்டில் 19 பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ. 3.63 கோடி மதிப்பீட்டில் 40 அங்கன்வாடி மையங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. 14 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 14.09 கோடி மதிப்பீட்டில் 127 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீல புரட்சித் திட்டத்தின் கீழ் (மீனவா்கள் குடியிருப்பு) 25.5 லட்சம் மதிப்பீட்டில் 15 மணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 1.77 கோடி மதிப்பீட்டில் 9 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் 10 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திட்டக் கூறுகள் ஒப்படைப்பு வருவாய் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடி மதிப்பீட்டில் 59 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.87 கோடி மதிப்பீட்டில் 41 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டம் ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல் திட்டத்தின் கீழ் ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் 55 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 13.89 கோடி மதிப்பீட்டில் 74 பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களையும், மற்றவா்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை இயன்றவரை தவிா்க்கவும்.

சமூக பரவலைத் தடுக்க மற்றவா்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீட்டா் இடைவெளி விட்டு தள்ளி இருக்கவும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளை அசுத்தமான கைகளோடு தொடாமல் இருக்க வேண்டும். காய்ச்சலின் அறிகுறி இருந்தால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT