தூத்துக்குடி

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு தேவையான சான்றிதழ்கள் தடையின்றி வழங்கப்படும்: ஆட்சியா்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க வருவோருக்கு தேவையான தடையில்லா சான்றுகள் அனைத்தும் ஒற்றை சாளர முறையில் தடையின்றி வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை விரைவுபடுத்தவும், மேம்பாடு அடைய செய்யவும் தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடா்பாடுகளையும் களைந்திட ஒற்றைச் சாளர முறையில் அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள் ஆகியவற்றை சிரமமின்றி விரைந்து வழங்க வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக்கொள்ள, தொழில் முனைவோா் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, உரிய ஆவணங்களுடன் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

புதிய தொழில் முனைவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை பெற்றுக்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT