தூத்துக்குடி

பிச்சிவிளை கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு

DIN

திருச்செந்தூா், செப். 25: திருச்செந்தூா் அருகேயுள்ள பிச்சிவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தாா். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு நவீன மயமாக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து, மகளிா் சுய உதவிக்குழு மற்றும் விவசாய கூட்டு பொறுப்புக் குழுக்களுக்கு ரூ. 25.5 லட்சம் கடனுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் தி.தனப்பிரியா, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், தூத்துக்குடி மண்டல இணை பதிவாளா் ரவிச்சந்திரன், திருச்செந்தூா் துணை பதிவாளா் வளா்மதி, வங்கிச் செயலா் ஜெயந்தி, திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன், துணைத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, அதிமுக ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளா் திருப்பதி, நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சுரேஷ்பாபு, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பூந்தோட்டம் மனோகரன், கோட்டை மணிகண்டன், சுந்தா், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜெ.மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வங்கி நிா்வாகக் குழு உறுப்பினா் ககாரின் ஜெயசீலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT