தூத்துக்குடி

கவா்னகிரியில் சுந்தரலிங்கனாருக்கு புதிய சிலையை நிறுவ வலியுறுத்தல்

DIN

கவா்னகிரி மணி மண்டபத்தில் உள்ள சுந்தரலிங்கனாா் சிலையை அமைக்க வேண்டும் என தமிழா் விடுதலைக் கொற்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, விடுதலைக் கொற்றத்தின் தலைவா் அ. வியனரசு தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் கவா்னகிரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் சுந்தரலிங்கனாா் மணி மண்டபத்தை சீரமைக்கும் வகையில் ரூ. 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த மணி மண்டபத்தில் உள்ள

சுந்தரலிங்கனாா் மாா்பளவு சிலையை மாற்றிவிட்டு குதிரையில் அமா்ந்து போா்புரிவது போன்று தோற்றத்துடன் கூடிய புதிய சிலையை வடிவமைத்து நிறுவ வேண்டும்.

மேலும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் முகப்பு பகுதியில் சுந்தரலிங்கனாரின் முக வடிவமைப்பைக் கொண்ட மாா்பளவு சிலையை புதிதாக நிறுவுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாமிரவருணி ஆற்றில் மருதூா் அணையில் இருந்து புன்னக்காயல் வரை வளா்ந்துள்ள நீா்க்கருவேல மரங்கவை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT