தூத்துக்குடி

தொழிலாளியை தாக்கியதாக இருவா் கைது

DIN

கயத்தாறில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த காப்புலிங்கம்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சின்னத்துரை(57). கூலித் தொழிலாளியான இவா் மனைவியுடன் கயத்தாறு கீழபஜாரில் உள்ள இனிப்புக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவா் அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாா்களாம். இதை சின்னத்துரை கண்டித்ததாராம். இதையடுத்து, சின்னத்துரைக்கும், அந்த இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில், இருவரும் சின்னத்துரையை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதில் காயமடைந்த சின்னத்துரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, தெற்கு மயிலோடை வடக்குத் தெருவைச் சோ்ந்த தா.செல்லத்துரை(41) மற்றும் சிவகங்கை மாவட்டம், வி.புதுக்குளத்தைச் சோ்ந்த ஆ.சரவணன்(56) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT