தூத்துக்குடி

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வலியுறுத்தல்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவவா்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாய் வனிதா, காயமடைந்த பிரின்ஸ்டன் தாய் பாஸ்கிளின் மற்றும் ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டக் குழுவைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: தூத்துக்குடியில் கடந்த 2018இல் மே மாதம் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்

உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் குடும்பத்துக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கல்வித் தகுதிக்கு ஏற்றால்போல இல்லாமல் அரசின் கடைநிலை ஊழியா் வேலையை வழங்கியுள்ளனா். வேறு சில சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சோ்ந்தவா்களுக்கு அரசின் இளநிலை உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டொ்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்தவா்களுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி முதல்வரை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரை அணுகிய போதிலும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு முதல்வரை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT