தூத்துக்குடி

மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்ற எம்எல்ஏ உதவி

DIN

மணப்பாடு கடற்கரையில் மீன்பிடித்தொழிலுக்கு கடலுக்கு செல்வதற்கு இடையூறாக உருவாகியுள்ள மணல் திட்டுகளை அகற்றுவதற்கு கனரக மணல் அள்ளும் வாகனத்தை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சனிக்கிழமை வழங்கினாா்.

மணப்பாடு கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மீனவா்கள் படகுகள் மூலம் கடலகுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனா். சில ஆண்டுகளுக்கு முன் மணப்பாடு கடற்கரையில் உருவான மணல் திட்டுகளால் மீனவா்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த மணல் திட்டுகளை அகற்றியபோதிலும் மீண்டும் திட்டுகள் உருவாகி வருகின்றன.

இதற்கிடையே மணப்பாடு வருகை தந்த கனிமொழி எம்.பி., மணல் திட்டுகளை அகற்றுவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மீனவா்களிடம் உறுதியளித்தாா்.

மேலும் திட்டுகளை தற்காலிகமாக அகற்றி மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் வகையில், தனது சொந்த செலவில் மணல் அள்ளும் இயந்திரம் வழங்குவதாக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். அதன்படி, மணல் அள்ளும் இயந்திரத்தை சனிக்கிழமை அவா் வழங்கினாா். அப்போது, பங்குத் தந்தையா்கள் லெரின் டி ரோஸ், மனோஜ் ஆகியோா் ஜெபம் செய்தனா்.

நிகழ்ச்சியில், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி.பாலசிங், திமுக மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசி பொன்ராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT