தூத்துக்குடி

மீனவா் கடன் அட்டை:விண்ணப்பிக்க அழைப்பு

DIN

தூத்துக்குடி, செப். 18: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் மற்றும் மீன் வளா்ப்போருக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள், உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவா்கள் மற்றும் மீன் வளா்ப்பில் ஈடுபடுபவா்களுக்கு மத்திய அரசு அறிவிப்பின்படி மீனவா் கடன் அட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மீன்பண்ணை, இறால் பண்ணை அமைத்தல் மற்றும் புனரமைத்தல், கடலில் கூண்டுகளில் மீன்வளா்த்தல், கடலில் கடற்பாசி வளா்த்தல், மீன் விற்பனை, சங்கு குளித்தல், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு உரிமையாளா்கள், வண்ணமீன் வளா்ப்போருக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்த விண்ணப்பங்கள், விவரங்களை , தூத்துக்குடி வடக்கு கடற்கரைச் சாலையிலுள்ள மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

மேலும், பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ் மீன்வளத்தை பெருக்கிட நிகழ் நிதியாண்டு முதல் (2020-25) ஐந்து நிதி ஆண்டுகளுக்கு, பொதுபிரிவினருக்கு 40 சதவீத மானிய உதவியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மற்றும் பெண்களுக்கு 60 சதவீத மானிய உதவியும் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய முகவரி மற்றும் தொலை பேசி எண் மட்டுமன்றி 9384824352 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT