தூத்துக்குடி

கோவில்பட்டியில் நூல் வெளியீட்டு விழா

DIN

பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, மறைந்த பாரதி ஆய்வாளா் இளசைமணியன் எழுதிய ‘மகாத்மா காந்தியடிகளும் ருசிய ஆளுமைகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் முதல்வா் சுப்பாராஜ் தலைமை வகித்தாா். இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநிலச் செயலா் தமிழரசன் முன்னிலை வகித்தாா். நூலை முன்னாள் எம்.பி. அப்பாதுரை வெளியிட, முதல்பிரதியை தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான கேசவன் பெற்றுக் கொண்டாா்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், எட்டயபுரம் வட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புச் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், முனைவா் சம்பத்குமாா், உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம், அனைத்து ரத்த தானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், திருவள்ளுவா் மன்ற துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, இலக்கிய உலா நிறுவனா் ரவீந்தா், குருரவிதாஸ் தொழிலாளா் கட்சியைச் சோ்ந்த விஜயகுமாா், அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டப் பொறுப்பாளா் பொன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT