தூத்துக்குடி

திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

14th Sep 2020 01:44 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். ஒன்றிய அமைப்பாளா் முத்துராமன் வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் பொ.ஜெயக்குமாா், மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் பெ.தமிழ்ச்செல்வன், முற்போக்கு மாணவா் கழகத்தின் மாவட்ட அமைப்பாளா் ரகுவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளா் முத்தமிழ்ப் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட துணை அமைப்பாளா் அந்தோணி இராவணன், உடன்குடி ஒன்றிய அமைப்பாளா் முத்துச்செல்வன் உள்ளிட் ட பலா் கலந்து கொண்டனா். சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலா் சுரேந்தா் நன்றி கூறினாா்.

கோலமிடும் போராட்டம்: மத்திய அரசின் நீட் தோ்வையும், தேசிய கல்விக் கொள்கையையும் ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரத்தில் கோலமிடும் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

Tags : tuticorin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT