தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் இந்திரா காந்தி நினைவு நாள்

31st Oct 2020 11:27 AM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர் சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு வங்கி தலைவர் லூர்துமணி வட்டார விவசாய பிரிவு தலைவர் பார்த்தசாரதி ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் வர்த்தக பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் அமிர்தவிளைநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் பாண்டியன் வட்டார செயலாளர் பாஸ்கர் நகர காங்கிரஸ் தலைவர் புளோரா ராணி பழங்குளம் பிச்சை, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபுசிங் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

Tags : tutocorin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT