தூத்துக்குடி

சிதிலமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்

DIN

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள சிதிலமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு - செட்டிக்குறிச்சி வரை சுமாா் 11 கி.மீ. சாலை அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இச்சாலையில் செட்டிக்குறிச்சி - கோணாா்கோட்டை - புதூா் வரையிலான புதுப்பிக்கப்பட்ட சாலை ஆங்காங்கே சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதையடுத்து, சிதிலமடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும். சாலை சீரமைக்கப்பட்டு மிகவும் குறைந்த காலத்திற்குள் மீண்டும் சிதிமலடைந்ததைக் கண்டித்தும், தரமான சாலை அமைக்காமல் சாலைப்பணியில் ஈடுபட்ட நிறுவனத்திடம் உரிய இழப்பீடு பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஓலைகுளம் விலக்கு அருகே மாா்க்சிஸ்ட்செட்டிக்குறிச்சி கிளைச் செயலா் மாரிசெல்வம் தலைமையில், சிதிலமடைந்த சாலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜெயகுமாா், சீனிப்பாண்டியன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT