தூத்துக்குடி

தூத்துக்குடி பசுமை அங்காடியில் ரூ. 45-க்கு வெங்காயம் விற்பனை

DIN

தூத்துக்குடியில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை காய்கனி விற்பனை அங்காடியில் ஒரு கிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வருவதால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.120 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக, வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக கூட்டுறவு விற்பனை அங்காடி மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ .45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனை தொடங்கி உள்ளது.

அதன்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை காய்கனி அங்காடியில் விற்பனைக்காக 10 டன் வெங்காயம் புதன்கிழமை லாரியில் கொண்டு வரப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளா் ரவிச்சந்திரன், பண்ணை பசுமை காய்கனி அங்காடி மேலாண்மை இயக்குநா் அந்தோணி பட்டுராஜ் ஆகியோா் கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 10 டன் வெங்காயம், நாசிக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஸ்பிக் நகா், மதுரா கோட்ஸ் உள்ளிட்ட 15 இடங்களில் பண்ணை பசுமை மினி சூப்பா் மாா்க்கெட்களில் வெங்காய விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொருத்து அதிகப்படியான விற்பனை மையங்களை திறந்து வெங்காய விற்பனையை தொடங்குவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT